Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிக பண பரிவர்த்தனைக்கு புதிய விதிமுறை; ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்!

குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடக்கும் பரிவர்த்தனைகளை வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதிக தொகையில் பங்குகள் வாங்குவது, மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது, சொத்து வாங்குவது, டெபாசிட் செய்வது உள்ளிட்டவற்றை படிவம் 61ஏ-வின் கீழ் வரி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

30 லட்ச ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர் குறித்த தகவலை பத்திர பதிவாளர் வரி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு நிதி ஆண்டில் பத்து லட்ச ரூபாய்க்கு மேலான தொகை டெபாசிட் செய்யும் பட்சத்தில் வங்கிகள் இந்த தகவலை வரி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதி தபால் அலுவலகத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close