Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன சந்தையால் சென்செக்ஸ் கடும் சரிவு!

மாலை 3.30 மணி நிலவரம்
சீன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் துவக்க நாளில் இன்று (04.01.16) கடும் வீழ்ச்சி அடைந்தது.

2016ம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சீன சந்தை கடும் சரிவை சந்தித்தது. சீனாவின் தொழில்துறை தரவுகள் குறைந்துள்ளதால் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவாக சீன பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சீன பங்குச்சந்தை 8.22 சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆனது.  கடந்த டிசம்பர் 16, 1996 ம் ஆண்டில் சீன சந்தை ஒரே நாளில் அதிகபட்சமாக 10.05 சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகம் ஆகியுள்ளது.

ஒரே நாளில் சீன பங்குச் சந்தை சரிவு விவரம்:


 

 

 

 

 

 

 

 

 

சீன சந்தைகள் கடும் வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 537.55  புள்ளிகள் குறைந்து  25623.35  என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  171.90 புள்ளிகள்  குறைந்து  7791.30 என்ற நிலையில் வர்த்தகமானது             
           
விலை அதிகரித்த பங்குகள்

ஹெச் யூ எல்  (0.29%)
ஏசியன் பெயின்ட்ஸ் (0.23%)
விப்ரோ (0.22%)
ஹெச் டி எல் டெக் (0.01%)


விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ்  (-6.18%)
ஐடியா செல்லுலார் (-5.31%)
பேங்க் ஆஃப் பரோடா  (-4.94%)
ஹிண்டால்கோ (-4.89%)
பிஎன்பி  (-4.08%)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ