Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"ஜீவன் லாப்" என்ற புதிய பாலிசி எல்ஐசி அறிமுகம்

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி "ஜீவன் லாப்' என்ற புதிய பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

"ஜீவன் லாப்' பாலிசி திட்டத்தில் வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் கூடுதல் பிரிமியம் செலுத்துவதன் மூலம், விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் உடல் செயலிழப்பு ஆகியவற்றிற்கான பலன்களையும் பெற முடியும்.

8 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். இந்த பாலிசி முதிர்விற்கான அதிகபட்ச வயது வரம்பு 75. "ஜீவன் லாப்' என்ற இந்த திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை காப்பீட்டு தொகை ரூ.2 லட்சம். அதிகபட்ச அடிப்படை காப்பீட்டு தொகைக்கு உச்சவரம்பு இல்லை.

இந்த புதிய திட்டத்திற்கான பாலிசி காலம் 16, 21 மற்றும் 25 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப பிரீமியம் செலுத்தும் காலம் முறையே 10,15 மற்றும் 16 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ