Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பல்லோ மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

நாடு முழுவதும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையை சார்ந்த அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சென்னையில் ஆயிரம் விளக்கை தலைமையிடமாக கொண்டு அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
 


 
இந்த நிலையில் இன்று காலை முதல் இந்தியா முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள  தலைமை அலுவலகம் உள்பட சென்னையில் 8 இடங்களிலும், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் வீட்டிலும் வருமான வரித்தறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரி ஏய்ப்பு சம்பந்தமாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்த காரணத்தை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். சென்னையின் பிரபல மருத்துவமனையில் ஒன்றான அப்பல்லோவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ