Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழகத்தில் கனமழை எதிரொலி; உற்பத்தி துறை குறியீட்டு எண் கடுமையாக சரிவு!

உற்பத்தித் துறையில் கொள்முதல் குறியீட்டு எண் (பிஎம்ஐ) கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிவடைந்துள்ளது.

நிகிகி இந்தியா உற்பத்தித்துறை பிஎம்ஐ அறிக்கையின்படி நவம்பர் மாதத்தில் 50.3 புள்ளியாக இருந்தது, டிசம்பரில் 49.1 புள்ளியாக சரிந்துள்ளது. 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்தால் விரிவாக்கப் பணிகள் நடைபெறும். அதற்குக் கீழாக சரிந்தால் வீழ்ச்சியைக் குறிக்கும். 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் குறியீட்டு எண் இந்த அளவுக்குக் கடுமையாக சரிந்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட சேதம் உற்பத்தித் துறையைக் கடுமையாக பாதித்துள்ளது. இதனால் உற்பத்தித் துறை குறியீட்டு எண் டிசம்பர் மாதத்தில் கடுமையாக சரிந்ததாக தெரிவிக்கின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ