Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல் நிறுவன வர்த்தகத்தைக் கைப்பற்ற போட்டா போட்டி!

டெல் நிறுவன வர்த்தகத்தைக் கைப்பற்ற டிசிஎஸ், சிடிஎஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

மருத்துவமனை மற்றும் அரசுத் துறைகளுக்கு ஐடி சேவையை பெராட் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை 1988 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் வேட்பாளரான ராஸ் பெராட் துவக்கி வைத்தார். இதன் பின் 2009 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தை 3.9 பில்லியன் டாலர் தொகைக்கு டெல் நிறுவனம் கைப்பற்றியது.

இந்த நிலையில் பெராட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கான தொகையை டெல் அறிவித்துள்ளது. பெராட் நிறுவனத்தை விற்பனை செய்ய 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை டெல் நிறுவனம் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP