Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்டெல் ஜீரோ, ஃப்ரீ பேஸிக்ஸ் நாஸ்காம் எதிர்ப்பு!

ஏர்டெல் ஜீரோ மற்றும் ஃபிரீ பேஸிக்ஸ் திட்டங்களை எதிர்ப்பதாக ஐடி தொழில்நுட்பத்துறையின் தேசிய அமைப்பான நாஸ்காம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், அவர்கள் வழங்கும் சேவையில் தேர்தெடுக்கும் வாய்ப்பைக் குறைக்கும் வகையில் உள்ளடக்கம், விலைக்கு ஏற்ப சேவை, அல்லது வேகத்தை கொடுக்கும் திட்டங்களை எதிர்ப்பதாக நாஸ்காம் தலைவர் ஆர்.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஏர்டெல் ஜீரோ மற்றும் ஃப்ரீ பேசிக்ஸ் இந்த திட்டங்கள் இணைய சம வாய்ப்பு வழங்கும் பல்வேறு விதமான இணையதள இணைப்புகள், பல்வேறு விதமான சேவைகள் கொள்கைக்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP