Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஃபோர்ப்ஸ் பட்டியலில் 45 இந்தியர்கள்!

30 வயதுக்குட்பட்ட இளம் சாதனையாளர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 45 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இடம்பிடித்துள்ளனர்.


ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தும் 30 வயதுக்குட்பட்டோர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இப்போது வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்காவிலிருந்து அதிக அளவிலான இளம் தொழில் முனைவர்கள் உருவாகியுள்ளனர். பட்டியலில் 45 இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் இடம்பிடித்துள்ளனர்.

நுகர்வோர் தொழில் நுட்பத்துறையில் 22 வயதான ஒயோ  ரூம்ஸ் நிறுவனர் ரிதிஷ் அகர்வால் இடம்பிடித்துள்ளார். மொபைல் செயலியான ஸ்பிரிங் நிறுவனர் ஜெகன் பியானி, நீரஜ் பியானி இடம் பிடித்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிட்டி குழும துணைத்தலைவர் நிலா தாஸ் (27) இந்த பட்டியலில் உள்ளார். வைகிங் குளோபல் இன்வெஸ்ட்டார்ஸ் நிறுவன ஆலோசகர் திவ்யா நித்திமி (29) உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் இந்த பட்டியலில் உள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close