Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

40 ஆயிரம் இடங்களில் வைபை வசதி; பிஎஸ்என்எல் அதிரடி

4ஜி-யை விட அசத்தல் வேகத்தில் இணையதள சேவை

நாடு முழுவதும் 40,000 இடங்களில் வைபை வசதியை (வை-ஃபை ஹாட்ஸ்பாட்ஸ்) ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நாடு முழுவதும் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் நோக்கில் 25,000 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன. தற்போது 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கவில்லை. அதற்கான அலைக்கற்றை ஒதுக்கீடும் எங்களிடம் இல்லை.

இந்த நிலையில் போட்டிகளை சமாளிக்கும் விதமாக நாடு முழுவதும் 40,000 இடங்களில் வைபை வசதியை ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதன் மூலம் 4ஜி-யைக் காட்டிலும் அதிகமான வேகத்தில் இணையதள சேவைகளைப் பெற முடியும்.

தற்போது நாடு முழுவதும் 500 இடங்களில் வைபை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் 2,500 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது." என்று அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close