Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் நிலையங்களை நவீனப்படுத்த விரைவில் ஒப்பந்தம்

நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களை நவீனப்படுத்த விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அருண் ஜெட்லி கூறுகையில், "சிறிய விமான நிலையங்களை உருவாக்கி பராமரிப்பதில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச ஓய்வூதிய நிதி மற்றும் கடன் பத்திர நிறுவனங்கள் கூட்டணி சேரும் வகையில் தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியை அரசு அமைத்திருக்கிறது. நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களை நவீனப்படுத்த விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட இருக்கிறது" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ