Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை எட்டி சாதனை!

கடந்த டிசம்பர் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் துறையின் சொத்து மதிப்பு புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளதாக கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிரிசில் நிறுவனம் கூறியுள்ளதாவது: பங்கு மற்றும் கடன்பத்திரம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டாளர்களின் பங்கேற்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான கால அளவில், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நிகர அளவில் ரூ.1.08 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டது.

இதன் காரணமாக, 2015 ஆம் ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 1.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.13.39 லட்சம் கோடியை எட்டியுள்ளது.  தொடர்ந்து ஒன்பது காலாண்டுகளாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ