Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நாராயண ஹிருதாலயா' பங்குகளுக்கு பலத்த வரவேற்பு; பட்டியலிட்ட முதல் நாளே 36% விலை உயர்வு!

பெங்களூரில் புகழ்பெற்ற நாராயண ஹிருதாலயா மருத்துவமனையின் பங்குகள் இன்று சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.


பெங்களூரில் புகழ்பெற்ற நாராயண ஹிருதாலயா ஐபிஓ சந்தையில் ஒட்டு மொத்தமாக 8.63 மடங்கு கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு (Over subscribed) இருந்தது. பங்கு விற்பனை மூலம் ரூ. 613 கோடி திரட்ட நாராயண ஹிருதாலயா திட்டமிட்டு இருந்தது.

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டின் முதல் பங்கு வெளியிடான 'நாராயண ஹிருதாலயா' பங்குகள் இன்று (06.01.16) சந்தையில் வெளியிடப்பட்டது. 'நாராயண ஹிருதாலயா' நிறுவனத்தின் பங்குகளை முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி வருவதால் இதுவரை 36 சதவிகிதம் வரை பங்கின் விலை அதிகரித்து காணப்படுகிறது.

நாராயண ஹிருதாலயா ஒரு பங்கின் விலை ரூ.250 ஆக நிர்ணயித்து பங்குகளை வெளியிட்டது. பட்டியலிடப்பட்டபோது நாராயண ஹிருதாலயா ஒரு பங்கின் விலை ரூ.291 ஆக இருந்தது. இப்போது நாராயண ஹிருதாலயா ஒரு பங்கின் விலை 36 சதவிகிதம் உயர்ந்து ரூ.340.95 ஆக அதிகரித்து காணப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ