Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி 10,000 எழுத்துக்கள் வரை டுவிட்டரில் ட்வீட் செய்யலாம்!

டுவிட்டர் நிறுவனம் எழுத்து வரம்பை அதிகரித்து அதன் சேவை தரத்தை உயர்த்தவும், புதிய பயனாளிகளை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது.

 

தற்போது சமூக வலைதளமான டுவிட்டரில் 140 எழுத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த நிலையில் எழுத்து வரம்பை 10,000 வரை அதிகரிப்பது குறித்து டுவிட்டர் நிறுவனம் ஆலோசனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டுவிட்டர் நிறுவனம் இந்த புது எழுத்து வரம்பை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் இந்த மாற்றத்தை அறுமுகப்படுத்தும் தேதி குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே, டுவிட்டரில் இந்த மாற்றம் குறித்து வதந்திகள் பரவியதால் எதிர்ப்புகள் எழுந்தது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் 2% சரிந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close