Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன சந்தை நிறுத்தம்; சென்செக்ஸ் கடும் சரிவு!


சீனாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. சீன பங்குச்சந்தை இன்று 7 சதவிகிதத்திற்கும் கீழ் சரிந்ததால் சீனாவில் இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சீனாவில் பங்குச்சந்தைகள் சரிவை கண்டதால் ஆசிய சந்தைகளும் ஆட்டம் கண்டன. ஜப்பான் பங்குச்சந்தை 1.5 சதவிகிதமும்,

தென் கொரியா சந்தை 0.7 சதவிகிதம் இறங்கி வர்த்தகமாகி வருகிறது.
இந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று (07.01.2016) காலை நேர வர்த்தகத்திக் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 353.29 புள்ளிகள் குறைந்து  25,052.42 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.   
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  110.10 புள்ளிகள் குறைந்து  7630.20 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
விலை அதிகரித்த பங்குகள்

லூபின் 1,761.00 (0.44%)
பார்தி ஏர்டெல் 323.35 (0.36%)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 139.85 (0.25%)
கெயில் 373.50 (0.21%)

விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா 85.10 (-4.27%)
கெய்ர்ன் இந்தியா 135.00 (-3.98%)
டாடா மோட்டார்ஸ் 353.95 (-3.27%)
பரோடா வங்கி 143.95 (-3.19%)
டாடா ஸ்டீல் 260.40 (-3.11%)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ