Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ.34 ஆயிரம் கோடியை லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு வழங்கியது எல்ஐசி!

கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் எல்ஐசி நிறுவனத்தின் நிகர லாபம் 10 சதவிகிதம் அதிகரித்து ரூ.36,087 கோடியாக உயர்ந்துள்ளது.

எல்ஐசி விதிமுறைகளின்படி தனது லாபத்தில் 95 சதவிகிதத்தை பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டும். அதன்படி ரூ.34,283 கோடியை தனது லட்சக்கணக்கான பாலிசிதாரர்களுக்கு வழங்கியுள்ளது.
எஞ்சிய 5 சதவிகித லாபம் நிறுவனத்தின் உரிமையாளரான மத்திய அரசுக்கு வழங்கப்படும்.

இதன்படி, மத்திய அரசுக்கு ரூ.1,804 கோடியை எல்ஐசி வழங்கியுள்ளது. 2014-15-ல் பங்குச் சந்தைகள் 25 சதவிகிதம் ஏற்றம் கண்டதே எல்ஐசி-யின் நிகர லாபம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ