Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணமோசடி: வங்கிகளின் ஆய்வறிக்கையைச் சமர்பிக்க ஆர்பிஐக்கு உத்தரவு

பண மோசடி (money laundering) மற்றும் வங்கி விதிமீறல்களைத் தடுக்க வேண்டி, வங்கிகளின் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு மத்திய பொருளாதார புலனாய்வு துறை உத்தரவிட்டுள்ளது.

 

இந்தியப் பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து மத்திய பொருளாதார புலானாய்வு துறை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கிகளின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கி தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.

ஆனால் இந்த விஷயத்தில் மிகவும் தீர்மானமாக உள்ள மத்திய பொருளாதார புலனாய்வு துறை வங்கிகளின் ஆய்வறிக்கையைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி தற்போது இதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் செய்யும் முறைகேடுகள் தடுக்கப்படும் என நம்பிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ