Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

8 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத நிதி; மத்திய அரசு தகவல்

நம் நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் உத்தரவாத நிதியை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் சிறுதொழில் தொடங்க உருவாக்கப்பட்டுள்ள ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்திற்கு கடன் உத்தரவாத நிதியாக 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். முத்ரா திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உத்தரவாத நிதியாக ஒதுக்கப்படும்.  

இந்த கடன் உத்தரவாத நிதி சிறுதொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் திரும்பாத பட்சத்தில் பயன்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ