Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெச்எம்டி நிறுவனத்தை இழுத்து மூட மத்திய அரசு திட்டம்!

பொதுத்துறை நிறுவனமான ஹெச்எம்டி நிறுவனத்தின் மூன்று அலகுகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஹெச்எம்டி நிறுவனத்தின் மூன்று அலகுகளான ஹெச்எம்டி வாட்சஸ், ஹெச்எம்டி சினார் வாட்சஸ் மற்றும் ஹெச்எம்டி பேரிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அரசாங்க விதிமுறைகளின் படி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டத்தை வழங்க உள்ளது. 2007-ம் ஆண்டு சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு விருப்ப ஓய்வூதிய திட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ