Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன சந்தை வர்த்தகம் நிறுத்தம்; சென்செக்ஸ் 554 புள்ளிகள் சரிந்தது!

சீன சந்தையின் பொருளாதார மந்தநிலை காரணமாக அந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் சீன சந்தையில் வியாழக்கிழமையான இன்று (07.01.16) வர்த்தகம் துவங்கி சில நிமிடங்களில் CSI 300 குறியீடு எப்போதும் இல்லாத வகையில் 5 சதவிகிதம் வரை சரிவை சந்தித்து. இதனால் சீன பங்குச்சந்தையின் வீழ்ச்சியைக் காக்க 15 நிமிடம் தற்காலிகமாக வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்காலிக முடக்கத்திற்குப் பிறகு துவங்கிய வர்த்தகம் அடுத்தச் சில நொடிகளில் 7 சதவிகித சரிவை எட்டியது. இதனால் சீன பங்குச்சந்தை வர்த்தகம் இன்றும் ஆட்டோமேடிக் ஷட்-டவுன் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. கடந்த நான்கு நாட்களில் இன்று 2வது முறையாக சீன சந்தை ஆட்டோமேடிக் ஷட்-டவுன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் இன்று துவக்கத்திலேயே 300 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, வர்த்தகத்தின் இறுதியில் 554.50 புள்ளிகள் குறைந்து  24,851.83 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. 
தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  172.70 புள்ளிகள் குறைந்து  7568.30 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
விலை அதிகரித்த பங்குகள்
பார்தி ஏர்டெல் 322.35 0.05

விலை குறைந்த பங்குகள்

வேதாந்தா 81.15 -8.72
கெய்ர்ன் இந்தியா 128.95 -8.29
பெல் 153.75 -7.18
டாடா ஸ்டீல் 249.90 -7.01
பரோடா வங்கி 139.50 -6.19

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ