Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரியின் "ஐடிஆர் 5 படிவம்" சரிபார்த்து அனுப்புவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரிக் கணக்கு தாக்கலை ஆன்லைன் முறை எனப்படும் இணைய வழியில் செய்வோருக்கு, புதிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளதாக தெரிகிறது.

இணைய வழி கணக்கு தாக்கலுக்குப் பின், அதன் இறுதி நிலையில் கிடைக்கும் "ஐடிஆர் 5" என்ற படிவத்தை காகித வடிவில் அச்செடுத்து, அதில் கையொப்பமிட்டு பெங்களுருவில் உள்ள வருமான வரித்துறையின் மைய அலுவலகத்துக்கு ஆன்லைனில் வரிக்கணக்கு தாக்கல் செய்ததில் இருந்து 120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.

இப்போது "ஐடிஆர் 5 படிவம்"ஐ சரிபார்த்து அனுப்புவதற்கான காலக்கெடுவை வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யாவிட்டால், சம்பந்தப்பட்டவர் வரிக்கணக்கு தாக்கல் செய்தவராக கருதப்பட மாட்டார்.

அதேசமயம் ஆதார் எண் அல்லது நெட் பேங்கிங் மூலம் உங்களின் வரிக்கணக்கு தாக்கல் விவரத்தை உறுதி செய்து இருந்தால் இந்த "ஐடிஆர் 5" படிவத்தை பெங்களூக்கு அனுப்பத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP