Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீன சந்தை எழுச்சியால் சென்செக்ஸ் மீண்டது

சீன பங்குச்சந்தை நேற்றைய வர்த்தகத்தில் 7 சதவிகிதத்திற்கும் கீழ் சரிந்தது. இதனால் கடந்த வாரத்தில் சீன பங்குச்சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையான நேற்றும் நிறுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக இந்திய சந்தைகளும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று (08.01.16) சீன சந்தையில் பங்கு வர்த்தகம் எழுச்சியுடன் காணப்படுவதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 106.72 புள்ளிகள் உயர்ந்து  24,958.75 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி  29.05 புள்ளிகள் குறைந்து  7597.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.       
          
விலை அதிகரித்த பங்குகள்

யெஸ் வங்கி 693.30 (2.13%)
டாடா மோட்டார்ஸ் 350.50 (2.02%)
டெக் மஹிந்திரா 520.95 (1.99%)
ஐடிசி 315.10 (1.78%)
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 140.00 (1.38%)

விலை குறைந்த பங்குகள்

கோல் இந்தியா 318.70 (-2.36%)
பஜாஜ் ஆட்டோ 2,380.80 (-1.59%)
ஏசிசி 1,281.75 (-1.44%)
லார்சன் 1,192.55 (-1.15%)
அல்ட்ராடெக் சிமென்ட் 2,643.00 (-0.93%)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ