Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பான் எண் விதிமுறையால் ரூ.500 கோடி இழப்பு

2 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வர்த்தகத்துக்கு பான் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இந்த உத்தரவு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் புதிய விதிமுறை காரணமாக 400 கோடி ரூபாய் முதல் 500 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்படும் என்று டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாஸ்கர் பட் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே ஐந்து லட்ச ரூபாய்க்கு மேல் பான் கட்டாயம் என்ற விதிமுறை காரணமாக எங்களது விற்பனை பாதிக்கப்பட்டது, இப்போது மேலும் பாதிப்படையும் என்றார். டைட்டன் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் நகை மூலமாக 73 சதவிகிதமும், வாட்ச் மூலமாக 25 சதவிகிதமும் வருகின்றது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP