Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

80 கோடி பயனாளிகளைத் தாண்டியது பேஸ்புக் மெசேஞ்ஜர் ஆப்

உலகின் பிரபல மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷான ஃபேஸ்புக் நிறுவனத்தின் "மெசேஞ்ஜர்" ஆப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 80 கோடியைத் தாண்டியுள்ளது.

உலகளவில் வாட்ஸ் அப், மெசேஞ்ஜர், ஸ்நாப்சேட், வைபர் போன்ற மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷன்கள்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 2015ம் ஆண்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷாக "மெசேஞ்ஜர்" ஆப் உள்ளதாக ஆய்வு நிறுவனமான நீல்சன் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஞ்ஜர் ஆப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 80 கோடியைத் தாண்டியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு மெசேஞ்ஜிங் அப்பிளிகேஷான வாட்ஸ் அப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை 90 கோடிக்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ