Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜனுக்கு விருது

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு "2016 ஆம் ஆண்டின் மத்திய வங்கியாளர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபினான்ஷியல் டைம்ஸ், பெருமைக்குரிய "த பேங்கர்" விருது இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.  குளோபல் மற்றும் ஆசியா பசிபிக் அளவில் 'த பேங்கர்' இதழ் சார்பில் ரகுராம் ராஜனுக்கு "2016 ஆம் ஆண்டின் மத்திய வங்கியாளர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு மிகவும் அவசியமான வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முக்கிய சீர்திருத்தங்கள் தொடக்க நிலையிலே மேற்கொண்டது, இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைத்திருந்தது மற்றும் இந்தியாவில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தியது போன்ற காரணத்தினால் இந்த விருது ரகுராம் ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ