Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2015-ல் அமோக வளர்ச்சி காட்டிய சிறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்..!

டந்த 2015-ல் சிறு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மொத்த ஈக்விட்டி துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பின் வளர்ச்சியை விட 20% அதிகமாக வளர்ந்துள்ளது. மேலும் பெரிய ஃபண்ட் நிறுவனங்கள்  வளர்ந்துள்ள போதும், சிறு முதலீட்டு நிறுவனங்கள் கடந்த வருடத்தில் நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளன.

அவற்றில் அதிகபட்சமாக இந்தியா புல்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் 1,939 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. அடுத்தபடியாக பீர்லெஸ் மியூச்சுவல் ஃபண்ட் 206 சதவிகிதமும், மோதிலால் ஒஸ்வால் ஏஎம்சி 192 சதவிகிதமும் எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் 156 சதவிகிதமும், ஜேபி மார்கன் மியூச்சுவல் ஃபண்ட் 115 சதவிகிதமும் கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்ட் 92 சதவிகிதமும் ரெலிகேர் இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் 82 சதவிகிதமும் வளர்ச்சியடைந்துள்ளன. 

ஆனால் பெரிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், யுடிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 9 சதவிகிதம் மட்டும் வளர்ந்துள்ளன. மேலும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட், ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட், பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு வளர்ச்சி 20 லிருந்து 40 சதவிகிதம் என்ற நிலையில் மட்டுமே உள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP