Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மைக்ரோ டேர்ம் இன்ஷூரன்ஸ் பஜாஜ் அலையன்ஸ் அறிமுகம்

"பஜாஜ் அலையன்ஸ் பீமா தண் சுரக்ஷா யோஜனா" எனும் மைக்ரோ டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் சிறிய வருமானத்துடன் வாழும் மக்களை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ரூ. 1,500 அல்லது மாதம் ரூ.200 செலுத்தக்கூடியதாக குறைந்தபட்ச பிரீமியமுடைய  "பீமா தண் சுரக்ஷா யோஜனா" எனும் மைக்ரோ டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை பஜாஜ் அலையன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த "பீமா தண் சுரக்ஷா யோஜனா" பாலிசியை 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எடுக்கலாம். இன்ஷூரன்ஸ் பாலிசி டேர்ம் 5,7 மற்றும் 10 ஆண்டுகள் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலிசியை குறைந்தது ரூ.5,000 அல்லது அதிகபட்சமாக ரூ.25,000 என ஒரே பிரீமியமாக செலுத்தலாம்.

பொதுவாக டேர்ம் இன்ஷூரன்ஸ் பிளானில் பாலிசி முடிவில் தொகை எதுவும் கிடைக்காது. ஆனால் இந்த பாலிசியில் கட்டிய பிரீமியம் திரும்ப கிடைக்கும் என்ற ஆப்சனும் இருப்பதாக பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ