Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் வளர்ச்சி 7.7 சதவிகிதமாக இருக்கும்; பிடபிள்யூசி தகவல்

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.7 சதவிகிதமாக இருக்கும் என்று பிடபிள்யூசி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து பிடபிள்யூசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை இதுவரை 1.25 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் தேவை அதிகரிக்கும். உற்பத்தி துறையில் அந்நிய முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டதால் இந்த துறையில் முதலீடுகள் உயரும்.

சீனா, இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ, ரஷ்யா மற்றும் இந்தோனேஷியா ஆகிய ஏழு வளரும் நாடுகளில் இந்தியா சிறப்பான வளர்ச்சியை பெரும். இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கும் சீர்த்திருத்த நடவடிக்கைகளுக்கான பலன் கிடைக்கும்.

தொடர்ந்து இரண்டாவது வருடமாக சீனாவின் வளர்ச்சி விகிதத்தை விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உயர்வாக இருக்கும். சீனாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.7 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுௐள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close