Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

10 பிராந்திய அலுவலகங்களை மூடுகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி!

பொதுத்துறை நிறுவனமான இந்திய ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) தனது திறனை மேம்படுத்தும் வகையில் அதன் 10 பிராந்திய அலுவலகங்களை மூடுவதாக அறிவித்துள்ளது.

அண்மையில் இந்திய ஓவர்சீஸ் வங்கியின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நாடு முழுவதும் 59 இடங்களில் உள்ள இந்திய ஓவர்சீஸ் வங்கியின் பிராந்திய அலுவலகங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி  வரும் 1.3.2016 ஆம் தேதிக்குள் 10 பிராந்திய அலுவலங்கள் மூடப்படும் என்று பிஎஸ்இ-க்கு வெளியிட்ட அறிவிப்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 59 பிராந்திய அலுவலங்களும், 7 மண்டல அலுவலங்களும் உள்ளன. இந்த நிலையில் பிராந்திய அலுவலகங்கள் மூடுவதன் மூலம் இந்திய ஓவர்சீஸ் வங்கி தனது திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ