Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச்சந்தையுடன் இணையாத "ஜீவன் ஷிகர்" திட்டம்; எல்ஐசி அறிமுகம்

பங்குச்சந்தையுடன் இணையாத "ஜீவன் ஷிகர்" என்ற புதிய திட்டத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி)அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் "ஜீவன் ஷிகர்" திட்டம் நேற்று (11.01.16) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 6 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். "ஜீவன் ஷிகர்" திட்டம் லாபத்தில் பங்கு, சேமிப்பு, பாதுகாப்பை வழங்கும் ஒற்றைப் பிரீமியம் திட்டமாகும். இந்தப் பிரீமியத் திட்டத்தில் பத்து மடங்கு இறப்பு பிரிமீயமாக அளிக்கப்படும். குறைந்தபட்ச ஒற்றை பிரீமியம் 6 வயது நபருக்கு ரூ.40,662-ம் 45 வயதினருக்கு ரூ.69,724-ம் செலுத்த வேண்டும்.

ஒற்றைப் பிரீமியத் தொகையும், முதிர்வு காப்புத் தொகையையும் காப்பீட்டுத்தாரரே தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. பாலிசி வழங்கிய தேதியிலிருந்து 3 மாதங்கள் அல்லது இலவச பார்வைக் காலம் முடிந்த பின் பாலிசி காலத்தில் கடன் பெறும் வசதியும் உண்டு.

குறைந்தபட்ச முதிர்வுத்தொகை ஒரு லட்சமாகும். அதிகபட்ச முதிர்வுத் தொகைக்கு வரம்பு இல்லை. புதியத் திட்டம் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின்னர், ஜீவன் ஷிகர் திட்டத்தில் இணைய முடியாது. செலுத்திய பிரீமியத் தொகைக்கு வரிச் சலுகையும், முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கும் உண்டு.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ