Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மிஸ்டு கால்' மூலம் பணப் பரிமாற்ற சேவை அறிமுகம்

நம் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கி "மிஸ்டு கால்' மூலமான பணப் பரிமாற்ற சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பெடரல் வங்கியின் மூத்த அதிகாரி பாபு கூறுகையில், "இந்திய வங்கித் துறை வரலாற்றில் முதன் முறையாக "மிஸ்டு கால்' வாயிலான பணப் பரிமாற்ற சேவைகளை ஃபெடரல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தங்கள் செல்போனிலிருந்து ஒரு "மிஸ்டு கால்' கொடுப்பதன் மூலம் வேண்டிய நபர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த வசதியினைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதும்" என்று பாபு கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ