Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு... அளிக்குமா அரசு?

புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் வரும் ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று  தொழில் துறை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

நம் நாட்டில் இளைஞர்கள் புதிய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும், இளைஞர்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டும் "ஸ்டார்ட் அப் இந்தியா" திட்டம் ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்டாலும் தற்போதைய சூழலில் தொழில் தொடங்குவோர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே தொழில் தொடங்கும் நடைமுறைகளில் எளிமையை கொண்டுவருவதோடு, இவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டு வரை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று தொழில் துறை அமைப்புகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ