Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சில்லரை விலை பண வீக்கம் டிசம்பரில் 5.61 சதவிகிதமாக அதிகரிப்பு!

நம் நாட்டின் சில்லரை விலை பண வீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 5.61 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

சில்லரை விலை பண வீக்கம் நுகர்வோர் விலைப்புள்ளி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.  கடந்த நவம்பர் மாதத்தில் 5.41 சதவிகிதமாக இருந்த சில்லரை விலை பண வீக்கம் டிசம்பரில்  5.61 சதவிகிமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2014 டிசம்பரில் 4.28 சதவிகிதமாக இருந்தது.

குறிப்பாக கடந்த 2015 டிசம்பரில் உணவு பொருட்கள் விலை 6.4 சதவிகிதமாகவும், உணவு தானியங்கள் விலை 2.12 சதவிகிதமாகவும், இறைச்சி, மீன் விலை 6.57 சதவிகிதமாகவும், முட்டை விலை 0.97 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது. பழங்கள் விலை 0.64 சதவிகிதமும், காய்கறி விலை 4.63 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ