Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்கள் மாநாடு: ஆந்திராவில் ரூ.4.78 லட்சம் கோடிக்கு முதலீடு குவிந்தது

ஆந்திராவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 4.78 லட்சம் கோடிக்கு தொழில் தொடங்க 331 நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆந்திர அரசு விசாகப்பட்டினத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டினை கடந்த ஜனவரி 10, 11 மற்றும் 12ம் தேதி நடந்தியது. கடந்த 3 நாட்களில் ரூ. 4.78 லட்சம் கோடிக்கு ஆந்திராவில் தொழில் தொடங்க பல நிறுவனங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில்,"முதலீட்டாளர்கள் மாநாட்டில் 4.78 லட்சம் கோடிக்கு 331 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இனி ஒவ்வொரு ஆண்டும் விசாகப்பட்டினத்தில் இந்த மாநாடு நடைபெறும். நாட்டின் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்க மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் தற்போது ஆந்திராவில் தொழில் தொடங்க பலர் முன் வந்துள்ளனர்" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ