Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை தொடங்கியது

அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது.

சண்டீகரில் வர்த்தக முறையிலான சேவையாக அல்லாமல் சில குறிப்பிட்ட பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு மட்டும் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

ரிலையன் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து 4ஜி சேவையை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது. 2500 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசையில் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. வருமானத்தை பகிர்ந்து கொள்வதன் அடிப்படையில் பிற இடங்களிலும் 4ஜி சேவையை தொடங்குவதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம் மற்றும் கொல்கத்தா தொலைத்தொடர்பு வட்டங்களை தவிர பிற அனைத்து வட்டங்களிலும் 4ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை உரிமம் பிஎஸ்என்எல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP