Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்போசிஸ் லாபம் ரூ. 3,465 கோடியாக அதிகரிப்பு

நம் நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் 2015 ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் 2 சதவிகித லாபத்தைப் பெற்றுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டு லாப அளவுகள் 2.9 சதவிகிதம் குறைவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கணிப்புகளையும் தாண்டி இன்போசிஸ் தற்போது 2 சதவிகித லாபத்தைப் பதிவு செய்துள்ளது. 

லாபம், வருவாய், வர்த்தகத்தில் தொடர்ந்து உயர்வைக் காட்டினாலும், ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெறும் அளவுகள் மட்டுமே குறையவில்லை. 3வது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றத்தின் அளவுகள் 18.1 சதவிகிதமாக உள்ளது.

2015 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாப அளவுகள் 2 சதவிகிதம் உயர்ந்து ரூ. 3,465 கோடியாக அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ