Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டில் 1,000 கோடி ரூபாயில் முதலீடு; செயின்ட் கோபைன் தகவல்

தமிழ்நாட்டில்  1,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக முன்னணி கண்ணாடி உற்பத்தி நிறுவனமான செயின்ட் கோபைன் தெரிவித்துள்ளது.

இது குறித்து செயின்ட் கோபைன் நிர்வாக இயக்குநர் பி.சந்தானம் கூறுகையில்,"கடந்த 2000 ஆம் ஆண்டு 500 கோடி ரூபாய் முதலீட்டுடன்  செயின்ட் கோபைன் நிறுவனம் தொடங்கப்பட்டது. இதுவரை மொத்தமாக 2,000 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறோம். இப்போது கூடுதலாக ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருக்கிறோம். 

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏற்கெனவே இருக்கும் ஆலையில் இந்த விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.  இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை 3,000 கோடி ரூபாய்  செயின்ட் கோபைன் நிறுவனம் முதலீடு செய்துள்ளது." என்று பி.சந்தானம் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ