Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவின் பொருளாதார வீழ்ச்சியும்... உலகளாவிய பாதிப்பும்!

  
ம் தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு "தென்னை மரத்தில் தேள் கடித்தால், பனை மரத்தில் நெறி கட்டுமா?" என்பார்கள். அந்த பழமொழிக்கு ஏற்றார்ப்போல் தான் உலக பங்குசந்தைகள் இன்று நடக்கின்றன.

அதாவது சீனா நாட்டில் அவர்களுடைய நாணய மதிப்பை (தற்பொழுது 0.5 சதவிகிதத்தை) குறைக்கின்ற நேரத்தில்   ஏன் அவர்கள் நாட்டின் பங்குச்சந்தையையும் ஆட்டம் காணுகிறது, மற்ற உலக நாடுகளிலிருக்கும் பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்திக்கின்றன.



 

உலகமயமாக்கலுக்கு பிறகு ஒரு நாட்டின் பொருளாதாரம்  மற்ற நாடுகளுடைய பொருளாதாரத்துடன் அதிகளவில் தொடர்புடையதாக காணப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு பிறகு பன்னாட்டு நிறுவனங்கள் பெரியளவில் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகளுக்கிடையே ஏற்றுமதி இறக்குமதி அதிகளவில் நடந்துகொண்டு இருக்கின்றன.

லண்டன் ஆலோசனை மூலதன பொருளாதாரம் (The London consultancy Capital Economics) என்ற ஆலோசனை  அமைப்பு சீனா சந்தையில் வெளிநாட்டவர்கள்  வெறும் 2% சதவிகித பங்குகளை  தான் சொந்தமாக வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளது.

இருப்பினும்  சீனா இப்போது உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய சக்தியாக உள்ளது. அது இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. உலளவில் பொருட்கள் மற்றும் வணிக சேவைகளை இறக்குமதி செய்வதில் இரண்டாவது  இடத்தில் இருக்கின்றது. உலக பொருளாதார செயல்பாடுகளில் சீனாவின் பொருளாதரம்   17 சதவிகிதம்  பங்குவகிக்கிறது.

யுவன் மதிப்பு குறைந்து அமெரிக்க டாலர் அதிகரிப்பதால் அப்படி டாலர்களால்  வாங்கப்படும் இறக்குமதி செய்யும்  பொருட்களால் சீனாவின் வாங்கும் சக்தி குறையும். அதனால் நுகர்வோர் செலவு செய்யும் (consumer spending)  நிதிகள் குறைந்தால் உலகின் பிற பகுதிகளை  பாதிக்கும்.  எண்ணெய், செம்பு மற்றும் இரும்பு தாது (oil, copper and iron ore) போன்ற தொழில்துறை பொருட்களை  சீனா  பெரியளவில்  வாங்குவதால்  அந்த நாட்டிற்க்கு இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும்  ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சீனாவின்  நிகழ்வுகள் எண்ணெய் விலைகளை  மிகவும் பாதித்திருக்கிறது. அது பதினான்கு வருடத்திற்கு  முன்னர்  இருந்த குறைந்த விலையை தொட்டிருக்கிறது.

உலகில் பொருளாதரத்தில் முதன்மையாக விளங்கும் அமெரிக்காவும், யுவான் மதிப்பு குறைப்பால் பாதிப்படையும். சீனாவில் கார், கணினி, ஆடை மற்றும் மரச்சாமான்கள்  உற்பத்தி செய்யபடுகின்றது.  யுவான் மதிப்பு சரிந்தால், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்கள் அமெரிக்க பொருட்களைக்காட்டிலும்  மிகவும் மலிவாக இருக்கும். அதே சமயம் சீனாவில் சீனா பொருட்களைவிட  அமெரிக்க பொருட்கள் அதிக விலையில் காணப்படும். 

அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் ஆரோக்கியமான நிலைக்கு திரும்பிருப்பதாக  மத்திய வங்கியான பெடரல் வங்கி கருதுவதால் அது குறைந்த வட்டிவிகிதங்களை அதிரிக்கும் நிலையில் இருக்கிறது. ஆனால்  சீனாவின் பொருட்கள்  விலை மலிவாக இருப்பதால்  யுவானுக்கு எதிரான வலுவான டாலர் மதிப்பு  மேலும் பணவிக்கதை குறைத்து விடும். ஏற்கனவே  அமெரிக்காவில்  பணவீக்கம் மிகவும் குறைவாக  இருப்பதால்  மத்திய வங்கி   வட்டிவிகிதங்களை உயர்த்த தயக்கம் காட்ட நேரிடும். 
 
யுவான் மதிப்பை குறைப்பதனால்  சீனா பொருட்கள்  மிக மலிவாக கிடைக்கும் என்பதனால்  மற்ற உலக  நாடுகளின் பொருட்களை போல் இந்திய பொருட்டுகளுக்கும் வியாபாரம் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுவிடும். அது உலகளவில் விலை போட்டிக்கு வழி விட்டுவிடும்.
சீனா ஒரு பெரிய உலோக நுகர்வோராக (consumer of metals) இருக்கிறது. அதே சமயம்  அது ஒரு இறுதி நிலைபெற்ற உலோக பொருட்களான (finished metal products) பெரிய உருக்கு மற்றும் தாமிரக் கம்பி(steel and copper wire) பெரிய உற்பத்தியாளர். சீனா பொருளாதாரம் நலிவடைந்தால் உலகளவில் உலோகத்தின் தேவை குறைந்துவிடும். அதனால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உலோக தாதுகளின் வணிகத்தை பாதிக்கும்.  மேலும் சீன உற்பத்தியாளர்கள் பெரியளவில் தங்களது மலிவான சரக்குகளை இந்திய நாட்டிற்குள் குவிக்கும் பொழுது இந்திய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள்.

கச்சா எண்ணெய் விலை குறைவு மிக பெரிய இறக்குமதியாளர்களான சீனா மற்றும் இந்தியாவிற்கு மொத்தத்தில் நன்மையாக இருந்தாலும் பெட்ரோலிய பொருட்களை கண்டறியப்படும் நிறுவனங்களுக்கும் அவைகளை  சுத்திகரிக்கப்பட்ட  ஏற்றுமதி செய்யும்  நிறுவனங்களுக்கும் விலை குறைவு ஒரு பெரிய இழப்பாகும்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகள் பெரியளவில் சீனாவில் முதலீடுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சீனாவின் நிகழ்வுகளினால்   பதட்டமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை (safe havens) தேடுவதால் சில வெளிநாட்டு முதளிட்டாளர்கள் இந்திய பங்குசந்தைகளை விட்டு  வெளியேறுகிறார்கள். 

இந்திய பங்குச்சந்தை இறக்கத்திற்கு வேறு சில உள்நாட்டு காரணங்கள் இருந்தாலும் சீனாவின்  நிகழ்வுகளினால் சில வெளிநாட்டு முதளிட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்பது தான் முக்கிய காரணாமாக கருதப்படுகிறது.

வி.ஆர்.சீனிவாசன் சீனியர் டீலர் ஐஎப்ஐஎன்
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ