Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

13 ஆவது மாதமாக நாட்டின் ஏற்றுமதி சரிவு!

நம் நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து 13 ஆவது மாதமாக  டிசம்பரில் 14 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. 

உலக அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்து  வருகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பரில் சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பு இல்லாததால் பெட்ரோலிய தயாரிப்புகள் மற்றும் பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி மிகவும் சரிவடைந்துள்ளது. இது, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் நாட்டின் ஏற்றுமதி டிசம்பரில் 2,220 கோடி டாலர் அதாவது ரூ.1.44 லட்சம் கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14.75 சதவிகிதம் குறைவாகும். இதே காலத்தில் நாட்டின் இறக்குமதி 3.88 சதவிகிதம் குறைந்து 3,396 கோடி டாலர் அதாவது கிட்டத்தட்ட ரூ.2.21 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ