Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிப் பங்குகள் வாங்க... நல்ல தருணம்...

மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளில் வேகம் குறைவு, வங்கிகளின் வாராக் கடன் தொடர்ந்து அதிகரிப்பு போன்றவை பொதுத்துறை வங்கிகளுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளன. அதுமட்டும் இல்லாமல் சீனப் பொருளாதார நிலைமை பங்குச் சந்தைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வங்கிப் பங்குகள் விலை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வங்கிப் பங்குகள் வாங்க இது நல்ல தருணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

தேசியப் பங்குச் சந்தையில் பேங்க் நிஃப்டி குறியீட்டுப் பட்டியலில் பிஎன்பி, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா, யெஸ் வங்கி, பரோடா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இந்த், பேங்க் ஆஃப் இந்தியா, எஸ்பிஐ, ஃபெடரல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி ஆகியவை உள்ளன.

பங்குச் சந்தையில் சென்ற வார இறுதி நிலவரப்படி சில வங்கிப் பங்குகள் சென்ற 52 வார குறைந்தபட்ச விலைக்கு அருகில்தான் பரிவர்த்தனை ஆகி வருகின்றன. பேங்க் ஆஃப் இந்தியா பங்கு அதிகபட்சமாக 68.04% வீழ்ச்சியுடன் உள்ளது. அடுத்தபடியாக கனரா வங்கி 59.19%, பஞ்சாப் நேஷனல் 54.81% சரிவடைந்துள்ளது. இது தவிர பேங்க் நிஃப்டி குறியீட்டுப் பட்டியலில் இடம் பெறாத ஓரியன்டல் 67.25%, அலகாபாத் வங்கி 57.81%, ஐஓபி 54.66%, யூனியன் வங்கி 50.19% போன்ற பங்குகளின் விலையும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

கடந்த ஓராண்டில் தேசிய பங்குச் சந்தைகளில் பொதுத் துறை நிறுவனப் பங்குகள் 15 முதல் 68 சதவிகிதம் வரை பலத்த அடி வாங்கியுள்ளன. தொடர்ந்து கடும் சரிவைச் சந்தித்துள்ள வங்கிப் பங்குகளை இப்போதிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போடலாம். இந்தத் தருணத்தில் இந்தப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு நல்ல வாய்ப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close