Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசம்பரில் தங்கம் இறக்குமதி 179% அதிகரிப்பு

கடந்த டிசம்பரில் தங்கம் இறக்குமதி 179 சதவிகிதம் உயர்ந்து 380 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் 850 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. 2014 ஆம் ஆண்டு இதே கால அளவில் 650 டன் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் டிசம்பரில் தங்கம் இறக்குமதி 380 கோடி டாலர் அதாவது ரூ.24,700 கோடியாக அதிகரித்துள்ளது.

இது, 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 179 சதவிகிதம் அதிகமாகும்.
தங்கம் இறக்குமதி அதிகரித்ததையடுத்து, இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவில், சென்ற டிசம்பரில் ரூ.75,000 கோடியாக அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ