Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்திரங்களை பாதுகாப்பது எப்படி?



3. சொத்து - பத்திரம்.
- கே. அழகுராமன், வழக்கறிஞர்


உங்கள் சொத்திற்கான பத்திரங்கள் பாதுகாக்கப்பட்டுவிட்டது. உங்கள்  சொத்து....?
“…செங்கல்பட்டு பக்கம் ஒரு மனை போன வருஷம் தான் வாங்கினேன். எங்கே இருக்குன்னு கண்டு பிடிக்கவே முடியல..

.. நேரா கார்ல கூட்டி வந்து தான் காட்டினாங்க... அதுக்கப்புறம் இப்பத்தான்  பார்க்க வருகிறேன். அடையாளமே தெரியல்ல..

…லே அவுட் போர்டு கூட பெருசா இருந்துச்சு. இப்ப எங்கன்னு தெரியல்ல..”
அப்ரூவல் இல்லாத லே அவுட்டில்  வாங்கும் மனைகளில்  பல இடங்களை இப்படித்தான் தேட வேண்டி வரும். காரணம்,  அருகருகே முளைத்துவரும் இதர அங்கீகாரமில்லா மனைப் பிரிவுகளும், அதன் விற்பனைக்காக மாற்றப்படும். ஏற்கெனவே  இருந்த  மனைப்பிரிவின்  கட்டமைப்புகள், அப்ரோச்  ரோடுகள், இதர வசதிகள் போன்றவை உங்கள் சொத்தை கபளீகரம் செய்யும்  காரணிகள் . 


இந்தக் குழப்படிகள் வராதிருக்க, வாங்கிய சொத்துக்கள் எதுவாக இருப்பினும், அதனை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது சென்று பார்வையிடுதல்  அவசியம். 


பேப்பர் ஒர்க்ஸ் எனப்படும் பதிவு, பட்டா போன்ற   ஏற்கெனவே  விவரித்த வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்  இவை . 


நீங்கள் வாங்கிய மனையானது அப்ரூவ்டு லே அவுட் - இல் உள்ளதெனில் பல பிரச்னைகள் தவிர்க்கப்படும். அதுவே அங்கீகாரம் இல்லாத மனைப் பிரிவெனில், பிரச்னை எந்த ரூபத்தில், எப்போது, எப்படி வரும் என்றே தெரியாத ஒரு நிலை.  இதனை தவிர்ப்பது  தான் வலைப்படுத்தல் (Fencing) என  உங்கள்  சொத்தை  பாதுகாக்கும்  ஒரு முக்கிய  அம்சம் .


உங்கள் பத்திரத்தில், சொத்து விவரத்தில் கண்டுள்ள அளவுகளின் படியும், நான்குமால் எனப்படும், (boundaries) நான்கு புறமும் உள்ள எல்லைகளின் விவரப்படியும் உங்கள்  சொத்தினை அளவிட்டு, நான்கு எல்லைக்குமான கல் ஊன்றி,  உங்கள் சொத்தினை அருகருகே  உள்ள  மற்ற  சொத்துக்களிலிருந்து  தனித்து,  பிரித்து  காட்டும்படியாக  வேலி அமைத்து,  அதனை அடையாளப்படுத்தல் (Demarcation)  மிகவும் அவசியம்.


அடையாளப்படுத்த வலைப்படுத்தல், காம்பௌண்டு சுவர் கட்டுதல், போன்ற எதனையும்  மேற்கொள்ளலாம்.  அதற்கான செலவிடல் நிச்சயம் உங்கள் சொத்து மதிப்பினை உயர்த்தும்.
முடிந்தால் அந்த இடத்தில் கிணறு எடுத்தும், பயன் தரும் மரங்கள் வைத்து, ஒரு மின்சார இணைப்பும் உங்கள் பெயரில் பெற்றுக் கொள்ளலாம். அது உங்களது சொத்தின் சுவாதீனத்தை மேலும் உறுதிபடுத்தும்.
இப்போது உங்கள் சொத்து நன்கு பாதுகாக்கப்பட்டு நல்ல விலை போகும் சொத்தாகிவிட்டது. நல்ல லாபத்திற்கு அதனை விற்கலாமா?  அல்லது அதில் கட்டலாமா ?


 …… பார்க்கலாம்……

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ