Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருந்துப் பொருட்களின் விலையில் அதிகபட்சமாக 35% லாபம் மட்டுமே; அனுமதிக்க அரசு திட்டம்

மருந்துப் பொருட்களின் விலையில் அதிகபட்சமாக 35 சதவிகிதம் வரைத்தான் லாபம் வைக்கலாம் என்ற புதிய வரம்பை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

முக்கிய மருந்துப் பொருட்களுக்கு பல மடங்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 680 மருந்துகளின் விற்பனை விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தற்போதைய அறிவிப்பால், இதர பட்டியலில் உள்ள 530 மருந்துகளின் விலையில் 126 மருந்துகளின் விலை 40 சதவிகிதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பல முக்கிய மருந்துப் பொருட்களின் விலை வரும் நாட்களில் 40 சதவிகிதம் வரை குறையும் எனத் தெரிகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ