Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியா 4-வது இடம்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

நியூ வேர்ல்டு வெல்த் என்ற அமைப்பு "ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தனிநபர் சொத்து" குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் 2015 ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் பட்டியலில் ஜப்பான் 12.60 லட்சம் கோடீஸ்வரர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக சீனா, ஆஸ்திரேலியா நாடுகள் உள்ளன. இதற்கு அடுத்தப்படியாக 2.36 லட்சம் பேர் கோடீஸ்வரர்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஐந்தாவது இடத்தில் சிங்கப்பூர் இடம்பிடித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ