Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆப்பிள் நிறுவனம் புதிய சாதனை!

கடந்த 3 மாதங்களில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 8 லட்சம் ஆப்பிள் மொபைல் தயாரிப்புகள் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பு, பொருட்கள் மீதான தள்ளுபடி, குறைபாடுள்ள பொருட்களை திரும்பப் பெறுவது மற்றும் பொருட்களுக்கான விலையை தவணை முறையில் செலுத்துவது போன்ற நடவடிக்கைகளால் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனையாகியுள்ளன. குறிப்பாக, ஆப்பிள் நிறுவன செல்போன்களில் iPhone 5s, 6s, 6s Plus விற்பனை மொத்த விற்பனையில் 30 சதவிகிதத்தை கொண்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ