Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொழில் செய்வதற்கு ஏற்ற நாடு இந்தியா! ஆய்வில் தகவல்

சர்வதேச அளவில் தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகளில் இந்தியா உள்ளதாக பிடபிள்யூசி என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிடபிள்யூசி நிறுவனம் சர்வதேச தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) குறித்து ஆய்வு மேற்கொண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. ஆய்வில் உலக அளவில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய ஐந்து சந்தைகளும் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மிக முக்கியமான சந்தைகளாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

சர்வதேச சராசரியை காட்டிலும் இந்திய சிஇஓ-களிடம் நம்பிக்கை அதிக அளவு இருப்பதாகவும், மோடி அரசு தொடர்ந்து தொழில் செய்வதற்கு சாதகமான அரசாக செயல்பட்டு வருவதாகவும், இந்தியா உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதாகவும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP