Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு; அரசு அனுமதி

ரூபாய் 6,050.10 கோடி மதிப்பிலான 5 அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் கூட்டத்தில். கெடிலா ஹெல்த்கேர் உள்ளிட்ட 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன் படி ரூ. 6,050.10 கோடி மதிப்பிலான 5 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் எச்எஸ்பிசி செக்யூரிட்டீஸ், கல்ப் குவாரி ஜெனரல் டிரேடிங் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கான அனுமதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ