Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6ஜிபி - 3ஜி டேட்டா இலவசம்... மோடி பெயரில் மகா மோசடி!

வாட்ஸ் அப் மூலம் சில திடுக்கிடும் வீடியோக்களும், ஆடியோக்களும் அவ்வப்போது வலம் வந்து சர்ச்சையை ஏற்ப்படுத்தி வருகின்றன.   "வாட்ஸ் அப்" மூலம்  பகிரப்படும் சில பதிவுகளால் பெரிய பூகம்பங்களும் உண்டாகின்றன.



 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி "மேக் இன் இந்தியா" என்று அழைக்கப்படும் செல்போன் ஆப்பை வெளியிட்டுள்ளார். இந்த ஆப்பை டவுன்லோட் செய்து ரிஜிஸ்டர் செய்தால் உங்களுக்கு 6ஜிபி - 3ஜி டேட்டா இலவசமாக கிடைக்கும். ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் என்று வாட்ஸ் அப்பில் இது குறித்த பதிவுகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. 

இது குறித்து வாட்ஸ் அப்பில் வலம் வரும் பதிவு:

Narendra Modi Has Released App Called 'Make In India' on the occasion of Digital India

Download The App And Get Free 6GB 3G Data Pack By Register Your Mobile Number on the app 

Download The App

Link : http://tiny.cc/digitalmakeinlndia

வாட்ஸ் அப்பில் வலம் வந்த விஷயம் சரிதானா என்பதை பரிசோதித்தோம். அதன் விவரம்


 

 

 

 

இந்த ஆப் டவுன்லோட் செய்த பிறகு 10 பேருக்கு ஷேர் செய்யுங்கள். ஷேர் செய்த பிறகு விளம்பரத்தைக் கிளிக் செய்யுங்கள். இதை இரண்டும் செய்த பிறகு உங்களுக்கு 6ஜிபி - 3ஜி டேட்டா கிடைக்கும் என்று அந்த ஆப்பில் உள்ளது. இறுதியில் ஒரு எம்பி இலவச டேட்டா கூட கிடைக்கவில்லை. இந்த வெப் சைட் இன் முகவரியை http://digitalmakeinin.byethost11.com/ பார்த்தால் இது மத்திய அரசின் இணையதளம் என்பதற்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இதனை டவுண்லோடு செய்ய முயற்சி செய்து ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்துக்கு மேல்.

நம்மவர்களுக்கு இலவசம் கொடுத்தே ஆட்சியை பிடித்து வருகிறார்கள். நவீன டெக்னாலஜி காலத்தில்  இத்தனை  ஜிபி டேட்டா பயன்பாடு இலவசம் என்று மக்களின் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள்.
ஏமாற்றுகிறர்கள் ஏன் மோடி பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாம் ஒரு விளம்பரம் தானா அல்லது இவர் பெயரில் நடைபெறும் மகா மோசடியா என்பது தெரியவில்லை. சில மோசடிகாரர்கள் இப்படி இணைய இணைப்பை அனுப்பி கம்ப்யூட்டரில் உள்ள ரகசிய தகவல்களை திருடுவதாக தகவல். எனவே, இலவசம் என்கிற வலையில் சிக்கி விடாதீர்கள். 

சோ.கார்த்திகேயன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ