Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காசு. பணம்.. துட்டு... சேமிக்க பலே ஐடியா!


இ-வாலட் மூலம் காசு. பணம்.. துட்டு... சேமிக்க பலே ஐடியா!

நீங்கள் செலவு செய்யும்  தொகையில் குறிப்பிட்ட தொகை  உங்களிடம்  திரும்பி வந்தால் எப்படி இருக்கும்?
சராசரியாக ஒரு மாதத்திற்க்கு 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை செலவு ஏற்படுவது சர்வ சாதாரணம்.



 

இதில் மொபைல் கட்டணம், மின்சாரக் கட்டணம் மற்றும் மளிகைப் பொருட்களுக்கான கட்டணம் என பல கட்டணங்கள் செலவிட வேண்டியுள்ளது. சாதரணமாக நாம் அதில் செலுத்தும் பணம் மொத்தமாக அப்படியே அம்பேல். ஆனால் செலவு செய்யும் பணம் மீண்டும் நமக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்.
அதுதான் இ-வாலட். அதாவது நாம் செலுத்தும் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவு இ-வாலட் கணக்குக்கு வந்து விடும். செலவு செய்தாலும் ஒரு தொகை நம் சேமிப்பில் செல்வது போல, பின்வரும் காலங்களில் அந்த தொகையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 

செலவு தொகை எப்படி சேமிப்பாக மாறுகிறது என்பதை இங்கே கிராபிக்ஸ் வரை படம் மூலம் விளக்கி இருக்கிறோம்.

குறிப்பு: இ-வாலட் மூலம் எவ்வளவு சேமிக்க முடியும் என்ற விவரம் அறிய படத்தின் மையப்பகுதியை முதலில் க்ளிக் செய்யவும். அதன்பின் மொபைல் கட்டணம், மின் கட்டணம் மூலம் எவ்வளவு சேமிக்க முடியும் என்ற விவரம் அறிய தனித்தனியாக உள்ள சிறிய வட்டங்களை க்ளிக் செய்யவும். இறுதியில் மாதம் எவ்வளவு சேமிக்கலாம். ஆண்டுக்கு கிட்டத்தட்ட எவ்வளவு சேமிக்கலாம் என்பதை அறியலாம்.

 

 


செலவு

மாத செலவு

(ரூபாய்)

கேஷ்பேக்

மாதந்திர சேமிப்பு

(ரூபாய்)

மொபைல் கட்டணம்

1,000

5%

50

மின்கட்டணம்

2,000

5%

100

டிடீஎச் கட்டணம்

500

5%

25

சமையல் எரிவாயு கட்டணம்

500

5%

25

மளிகை பொருட்கள்

6,000

10%

600

பயணச் செலவுக்கள்

1,000

10%

100

திரைப்படம் பார்க்க

500

10%

50

ஆன்லைனில் உணவு ஆர்டர்

2,000

20%

400

மாதத்திர மொத்த சேமிப்பு

1,350

ஆண்டு சேமிப்பு

16,200



இப்படி செலவு செய்தால் கிட்டத்தட்ட 12,000 ரூபாய் கையை விட்டு சுலபமாக சென்று விடும். இதேயே நாம் இ-வாலட் மூலம் கட்டணங்களை செலுத்தினால் மொபைல் கட்டணத்திற்கு 5%, மின்கட்டணத்துக்கு 5% என பல்வேறு கட்டணங்களுக்கு கேஷ்பேக் வசதி உள்ளதால் நாம் செலவு செய்யும் தொகையின் ஒரு பகுதி நமக்கு கிடைக்கும். அதாவது கிட்டத்தட்ட 12,500 ரூபாய் செலவு செய்தால் மாதத்திற்கு 1,350 ரூபாய் வரை சேமிக்க முடியும். இதவே ஆண்டிற்கு கிட்டத்தட்ட 16,000 ரூபாய் வரை சேமிக்க முடியும்.

இ-வாலட் என்பது ஒரு ஆன்லைன் ப்ரீபெய்டு கணக்கு, கைப்பேசிகளில் ரீச்சார்ஜ் செய்து அதை பேசிக் கழிப்பது போல இ-வாலட்டில் பணம் செலுத்தி அந்த பணத்தை பொருட்கள் வாங்க, கட்டணங்கள செலுத்த, மொபையில் ரீச்சார்ஜ் செய்ய என இன்னும் பல ஆன்லைன் வர்த்த்கத்திற்கு பயன்படுத்தலாம்.

இ-வாலட் கணக்கை எப்படி துவங்குவது?

பல இ-வாலட்டிற்க்கு என்று பிரத்தியேக இணைய தளங்கள் உள்ளன.  அந்தந்த தளத்திற்கு சென்று குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை  பின்பற்றி நமக்கான கணக்கை துவங்கலாம். நமது இ வாலட் கணக்கில் பணத்தை செலுத்த கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் அல்லது ஆன்லைன் பேங்கிங்கையோ பயன்படுத்தலாம்.

பயன்கள்: 

கணக்கை துவங்கி பயன்படுத்துவது மிகவும் எளிதானது.

மினிமம் டெபாஸிட் என ஒன்று இல்லை. எனவே தேவையான அளவு பணத்தை செலுத்தி வைத்தால் போதும்.

பல இ-வாலட்களில் "கேஷ்பேக்" வசதியும் உள்ளன.  எனவே கட்டணத்தை செலுத்துவதோடு, செலுத்திய பணத்தில் ஒரு பகுதி நமக்கே திரும்பிவிடும்.

இ-வாலட் பயன்படும் இடங்கள்:

ஏறக்குறைய அனைத்து ஆன்லைன் வர்த்தகத் தளங்களிலும் இ-வாலட்டை பயன்படுத்த வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்க், பயணச்சீட்டு வாங்குதல், மொபைல் கட்டணம் செலுத்துதல், ரீச்சார்ஜ் செய்தல் உட்பட பல இடங்களில் இ-வாலட் பயன்படுத்தப்படுகிறது.

பா.அபிரக்ஷன் (மாணவப் பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ