Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறு முதலீட்டாளரின் முதலீடு அதிகரிப்பு!

சிறு முதலீட்டாளர்கள் முதலீடு, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2014ல் சிறு முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டில் 73%  ஈக்விட்டி ஃபண்டுகள் முதலீடு செய்யப்பட்டிருந்தவைகள், தற்போது டிசம்பர் 2015ல் 74% ஆக அதிகரித்திருப்பதாக ப்ரைம் டேட்டா பேஸ் என்கிற நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் ஹை நெட் வொர்த் (HNI) முதலீட்டாளர்களின் முதலீடுகள் டிசம்பர் 2015 நிலவரப்படி கடனில் 56%, ஈக்விட்டி சார்ந்தவைகளில் 38% ஆகவும் இருக்கிறது.  2015ஆம் ஆண்டில் இந்திய சந்தைகள் அதிக எற்ற இறக்கத்துடன் இருந்த போதிலும் இந்திய சந்தைகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு தொடர்ந்து இருந்தது என்பதற்கு சான்றாக சிறு முதலீட்டாளர்களின் முதலீடு 17% அதிகரித்திருக்கிறது. டிசம்பர் 2014 நிலவரப்படி 1.68 லட்சம் கோடியாக இருந்த மொத்த சிறு முதலீட்டாளரின் முதலீடு, 2015 டிசம்பர் நிலவரப்படி 1.96 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் முக்கிய 15 நகரங்கள் இல்லாமல் மற்ற நகரங்களிலிருந்து வரும் சிறு முதலீட்டாளர்களின் ஈக்விட்டி சார்ந்த முதலீடு கடந்த டிசம்பர் 2014-வை விட 18% குறைந்திருப்பதையும் ப்ரைம் டேட்டா நிறுவனம் சுட்டிக் காட்டி இருக்கிறது.

மாநிலம் வாரியாக 1.41 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து டெல்லி 41,019 கோடியோடு 2ஆவது இடத்திலும், 31,245 கோடி ரூபாயோடு கர்நாடகா 3ஆவது இடத்திலும் இருக்கிறது.

முதலீடுகள் அதிகரித்த மாநிலங்களில் டெல்லி 71% அதிகரித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த டிசம்பர் 2014ல் 23,935 கோடியாக் இருந்த முதலீடு டிசம்பர் 2015ல் 41,019 கோடியாக அதிகரித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ