Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடியாக களம் இறங்க; ஆப்பிள் திட்டம்

இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்தும் நோக்கில்  ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடியாக களம் இறங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐ-பேட், ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒற்றை பிராண்டு சில்லரை விற்பனை கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் நேரடியாக களம் இறங்கவும் மத்திய தொழில் கொள்கை, மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் வேண்டி ஆப்பிள் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய தொழில் கொள்கை, மேம்பாட்டு வாரியம் ஆப்பிள் நிறுவனத்திடம், சில கூடுதல் விவரங்களை கோரும் என தகவல் தெரிவிக்கின்றன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ